என்னைத் தேடி...
என்னைத் தேடி நானே புறப்பட்டிருக்கிறேன்... எனக்குள் இருக்கும் என்னைத் தேடி... நான் தொலைத்துவிட்ட என்னைத் தேடி.. எதை அடைய விரும்பினேனோ அதை நானே தொலைத்துவிட்டு மீண்டும் அதைத் தேடும் என்னைத் தேடி... உண்மை எது, பொய் எது என்று அறியாமல் ஏமாந்த என்னைத் தேடி... காதலை வார்த்தைகளால் சொல்லத் தெரியாத கோழையைத் தேடி... பிடிக்காத வாழ்க்கையை பிடிக்கவைக்கப் போராடிய ஒரு கொடியவனைத் தேடி... கண்முன்னாலேயே அனைத்தையும் தொலைத்துவிட்டு, தொலைந்துவிட்டதே எனப் புலம்பிக் கொண்டிருக்கும் என்னைத் தேடி... இதோ புறப்பட்டுவிட்டேன்... என்னை அடைகிறேனோ இல்லையோ... என் மனக்குறைகளை கொட்டித் தீர்க்க ஆசைப்படுகிறேன்... முகம் காட்ட மறுக்கிறேன் என்று என்னை மறுத்துவிடாதீர்கள். என் முகத்தை எனக்குக் காட்டவே நான் விரும்பவில்லை. அதை உங்களுக்கும் காண்பிக்க வேண்டாமே என்று எண்ணுகிறேன். அன்பைத் தேடிப் போவதா? இலட்சியத்தைத் தேடிப் போவதா? இல்லை, ஒன்றுமில்லாத புதிய வாழ்க்கையை தேடிப் போவதா என்கிற குழப்பம் எனக்குள்... இதில் என்முகத்தை எங்கே காட்டுவது? உலகத்தில் முகமூடி என்பது பலவற்றுக்கு வசதியானது......