என்னைத் தேடி...
என்னைத் தேடி நானே புறப்பட்டிருக்கிறேன்...
எனக்குள் இருக்கும் என்னைத் தேடி...
நான் தொலைத்துவிட்ட என்னைத் தேடி..
எதை அடைய விரும்பினேனோ அதை நானே தொலைத்துவிட்டு மீண்டும் அதைத் தேடும் என்னைத் தேடி...
உண்மை எது, பொய் எது என்று அறியாமல் ஏமாந்த என்னைத் தேடி...
காதலை வார்த்தைகளால் சொல்லத் தெரியாத கோழையைத் தேடி...
பிடிக்காத வாழ்க்கையை பிடிக்கவைக்கப் போராடிய ஒரு கொடியவனைத் தேடி...
கண்முன்னாலேயே அனைத்தையும் தொலைத்துவிட்டு, தொலைந்துவிட்டதே எனப் புலம்பிக் கொண்டிருக்கும் என்னைத் தேடி...
இதோ புறப்பட்டுவிட்டேன்...
என்னை அடைகிறேனோ இல்லையோ... என் மனக்குறைகளை கொட்டித் தீர்க்க ஆசைப்படுகிறேன்...
முகம் காட்ட மறுக்கிறேன் என்று என்னை மறுத்துவிடாதீர்கள்.
என் முகத்தை எனக்குக் காட்டவே நான் விரும்பவில்லை.
அதை உங்களுக்கும் காண்பிக்க வேண்டாமே என்று எண்ணுகிறேன்.
அன்பைத் தேடிப் போவதா?
இலட்சியத்தைத் தேடிப் போவதா?
இல்லை, ஒன்றுமில்லாத புதிய வாழ்க்கையை தேடிப் போவதா என்கிற குழப்பம் எனக்குள்...
இதில் என்முகத்தை எங்கே காட்டுவது?
உலகத்தில் முகமூடி என்பது பலவற்றுக்கு வசதியானது...
புறம் பேசவும், அகம் பேசவும்...
நல்லதுக்கும் சரி, கெட்டதுக்கும் சரி...
முகமூடி மிகவும் வசதி.
என்னோடு பயணியுங்கள். ஒரு வேளை நீங்கள் என்னை அறிந்து கொள்ள நேரிடலாம்.
நேருக்கு நேர் சந்திக்க நேரிடலாம்.
ஒரு தேநீர் அருந்திக் கொண்டே பேசலாம்...
விரும்பினால் என் மனக் குறைகளை அப்போதேனும் கேட்டுவிட்டுச் செல்லுங்கள்...
நான் ஒன்றும் அந்நியமல்ல, உங்கள் நண்பன் தான்...
முகமறியா நண்பன் தான்...
திருடனல்ல, குருடன்.
வாழ்க்கையை தொலைத்துவிட்டு தேடும் குருடன்.
பார்வை கிடைக்கலாம்.
கிடைக்காமலும் போகலாம்...
பயணங்கள் மட்டுமாவது தொடரட்டும்....

தேடுங்கள் உங்கள் முகவரி கிடைக்கும்.
ReplyDelete-கில்லர்ஜி
பயணம் ஆரம்பம்
Deleteதேடுதல் வந்துவிட்டால் அனைத்தும் உணரலாம். உங்கள் தேடல் தொடரட்டும்.
ReplyDeleteதேடுங்கள் கிடைக்கும்..
ReplyDeleteமுதல் பதிவு அட்டகாசமாய் இருக்கு. வாழ்த்துகள்...
என்னோடு பயணியுங்கள்/// ஃபாலோ ஆப்ஷன் இல்லாம எப்படி பயணிக்குறதாம்?! முதல்ல ஃபாலோ ஆப்ஷன் வைங்க. அப்பதான் உங்களை பின் தொடர வசதியா இருக்கும். நீங்கள் பதிவு போட்டதும் எங்களுக்கு தெரியவரும். இல்லைன்னா ஒவ்வொரு தளத்துக்கும் போய் மாது வந்திருக்கேன்ற மாதிரி பதிவு போட்டிருக்கேன்னு சொல்லவேண்டி வரும்.
ReplyDeleteகருத்துக்கும் பதில் சொல்லுங்க!
போர்க்களம் என்பது வலைப்பூவின் தலைப்பா இருக்கட்டும். எழுதுபவருக்கு தனிப்பெயர் இருக்கனும். சொந்த பெயரில் எழுத விருப்பமில்லைன்னா புனைப்பெயரிலும் எழுதலாம்.
வாழ்ந்துக்கெட்ட ஜமீந்தாராய் வலைப்பூ இருக்கு. புதுசா ஆள் ஒருத்தர் வந்தால் விட்டுடுவோமா?! நிச்சயமாய் கைக்கொடுப்போம்!!
விரைவில் சதமடிக்க வாழ்த்துகள்.
தேடுங்கள் நண்பர்கள் பலரும் கிடைப்பார்கள்.
ReplyDeleteபயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.
சிறப்பான தேடல் பதிவு
ReplyDeleteசிந்திக்க வைக்கும் பதிவு
நன்றி
Delete